அமெரிக்கா வருகை தருமாறு பொரிஸ் ஜோன்சனிற்கு அழைப்பு

drumb and boris johnson
drumb and boris johnson

அண்மையில் பிரித்தானியாவில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் பழமைவாத கட்சி தனிப்பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றது.

இந்நிலையில் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவுக்கு வருமாறு பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கு ஜனாதிபதி டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.

டிரம்பின் இந்த அழைப்பை பொரிஸ் ஜோன்சன் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அமெரிக்க பயணத்துக்கான திகதி குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் பிரித்தானிய அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.