பூமியைத் தாக்கும் பாரிய சூரியப் புயல் அச்சத்தில் விஞ்ஞானிகள் !

201811161510531957 Solar storm WARNING Dangerous space weather could plunge SECVPF
201811161510531957 Solar storm WARNING Dangerous space weather could plunge SECVPF

பூமியைத் தாக்கும் மிகப்பெரிய சூரிய புயலால் ஜி.பி.எஸ், தொலைபேசி சிக்னல்கள் சேதமடைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சூரியனில் வீசும் புயலால் பூமியின் தொலைத் தொடர்பு பாதிக்கப்பட வாய்ப்பு என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் ஒரு சூரிய புயல் பூமியை நோக்கி வரும் என்றும் இது பூமியின் காந்தப்புலத்தை தாக்கும் எனவும் நாசா விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

மிகப்பெரிய சூரிய புயல் பூமியின் மேல் வளிமண்டலத்தில் இயங்கும் செயற்கைக்கோள்களைத் தாக்கும், இது ஜி.பி.எஸ், மொபைல் போன் சிக்னல்கள் மற்றும் செயற்கைக்கோள்களை பாதிக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இந்த சூரியப் புயல் உலகின் சில பகுதிகளில் மின் அமைப்புகளையும் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.

வலுவான காற்று பூமியின் காந்த மண்டலத்தில் புவி காந்த புயலைத் தூண்டக்கூடும் என்றும் நிபுணர்கள் அஞ்சுகின்றமை குறிப்பிடத்தக்கது.