அமேசன் காடுகளில் உள்ள சிறுத்தைப்புலிகள் மீன்களை பிடித்து சாப்பிட கற்றுக்கொண்டிருப்பதாக சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகின் நுரையீரல் என்றழைக்கப்படும் அமேசன் காடுகளில் கடந்த ஆகஸ்ட் மாதம் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இதில் அக்காட்டின் பெரும்பாலான பகுதிகள் தீயில் கருகி நாசமாகின. பல்வேறு வகையான வனவிலங்குகளும், பறவைகளும், ஏராளமான மரங்களும் அழிந்தன.
இந்நிலையில், அமேசன் காட்டில் உள்ள சிறுத்தைப்புலிகள் மீன்களை வேட்டையாடி சாப்பிட பழகியுள்ளது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது அமேசன் காடுகளில் சிறுத்தைப்புலிகள் மீன்களை இரையாக பிடித்து சாப்பிடும் காட்சி பதிவாகியுள்ளது.
இதுவரை எந்த சிறுத்தைப்புலியும் மீன்களை உணவாக உட்கொள்வதை நான் பார்த்ததில்லை, இது வினோதமாக உள்ளது என சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர் தனது ஆதங்கத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.