சீனா, ரஷ்யாவில் அதிகரிக்கும் கொரோனா!

696428
696428

சீனாவில் மீண்டும் புதிய கொவிட் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில்  கொவிட்19 தொற்றுறுதியான 71 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று முதன்முதலாக சீனாவில் கண்டறியப்பட்டதுடன், பின்னர் உலகம் முழுவதும் அதன் தாக்கம் ஏற்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இதன்காரணமாக அங்கு கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டிருந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், மீண்டும் சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதேநேரம், ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 23, 032 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

அத்துடன் இந்த காலப்பகுதியில், கொரோனா தொற்றினால் 779 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கமைய, ரஷ்யாவில் இதுவரை கொவிட் 19 தொற்றுதியானோரின் எண்ணிக்கை 6,172, 812 ஆக அதிகரித்துள்ளது.

அங்கு கொவிட்19 தொற்றினால் பலியானோர் எண்ணிக்கை 155, 380 ஆக உயர்ந்துள்ளது.