மியன்மாரில் கொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பில் மனித உரிமை கண்காணிப்பகம் கவலை!

0deac6d5 d914 4535 bd11 5e3128917e99 medium16x9 AP21086233732615
0deac6d5 d914 4535 bd11 5e3128917e99 medium16x9 AP21086233732615

மியன்மாரில் ஆங்சான் சூகியின் அரசாங்கத்தை வீழ்த்தி இராணுவம் நிர்வாகத்தை கைப்பற்றிய ஆறு மாத காலப்பகுதியில் இராணுவம் மேற்கொண்ட பல்வேறு தாக்குதல்களின் போது சுமார் ஆயிரக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் கவலை வெளியிட்டுள்ளது.

இது தவிர வீதி போராட்டங்களில் கலந்து கொண்ட ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடு தழுவிய சிவில் ஒத்துழையாமை நடவடிக்கைகளில் அரசாங்க உயர் அதிகாரிகள் உட்பட அதிக அளவிலான ஊழியர்கள் தொடர்ந்தும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், நிர்வாகம் பாதிப்படைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் ஊழியர்கள் பணி நிறுத்த போராட்டங்களில் இணைந்துள்ளமையினால் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகள் முற்றாக செயலிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆங்சான்சூகி சட்டவிரோதமாக தொலைத்தொடர்பு கருவிகளை நாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாகவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை உதாசீனம் செய்துள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் நிரூபிக்கப்படும் பட்சத்தில் 10 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.