கடந்த 6 மாதங்களில் தென் ஆபிரிக்காவில் 249 காண்டாமிருகங்கள் வேட்டை!

513293
513293

இந்த வருடத்தின் முதல் ஆறு மாத காலப்பகுதியில், தென் ஆபிரிக்காவில் 249 காண்டாமிருகங்கள் சட்டவிரோதமாக வேட்டையாடப்பட்டுள்ளதாக தென் ஆபிரிக்க சுற்றாடல் மற்றும் வனத்துறை அமைச்சர் பாபரா கிறீசி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விதிக்கப்பட்டிருந்த கடுமையான முடக்கல் நடவடிக்கைகள் தளர்த்தப்பட்ட நிலையில், சட்ட விரோதமாக மிருகங்களை வேட்டையாடுவது அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியாக 80 சதவீதமான காண்டாமிருகங்கள் தென் ஆபிரிக்காவில் உள்ளன.

அருகிவரும் காண்டாமிருகத்தின் கொம்பு அதிக பெறுமதி கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காண்டாமிருகத்தின் கொம்பு உட்பட பல உடற்பாகங்களில் இருந்து பாரம்பரிய மருந்து வகைகள் தயாரிப்பதற்காக ஆசிய நாடுகளுக்கு கடத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே காண்டாமிருகங்கள் அதிக அளவில் வேட்டையாடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் ஆறு மாத காலப்பகுதியில் மட்டும் ரூகர் தேசிய பூங்கா பிரதேசத்தில் 132 காண்டாமிருகங்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.