7இல் ஒரு இந்தியருக்கு மனநல பாதிப்பு

mind upset
mind upset

இந்தியாவில் 7 பேரில் ஒருவர் இதில் ஏதாவது ஒரு மனநிலை பாதிப்புக்கு ஆளாகி இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சியினூடாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்திய அளவில் 19 கோடியே 70 இலட்சம் பேருக்கு பாதிப்புகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

1990-ம் ஆண்டை ஒப்பிடும்போது இது 2 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் நாட்டில் 4 கோடியே 57இலட்சம் பேர் மன அழுத்தத்துக்குள்ளாகி இருக்கிறார்கள்.

4 கோடியே 49 இலட்சம் பேர் பதட்டத்தால் ஏற்படும் படபடப்பு நோய்க்கு ஆளாகி உள்ளனர்.

இது தொடர்பாகக எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி பேராசிரியர் ராஜேஷ் சாகர் கூறுகையில்,

‘இந்தியாவில் மனநல மருத்துவர் சேவையை இன்னும் மேன்மைபடுத்த வேண்டியது அவசியமாகிறது. மக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் உரிய சிகிச்சை முறைகளை மக்கள் பயன்படுத்திக் கொண்டால் இந்த பாதிப்பை குறைக்க முடியும்’ என தெரிவித்தார்.