தலிபான்களை ஆதரிக்கும் உள்ளடக்கங்களை தடைசெய்வதாக முகநூல் அறிவிப்பு!

facebook generic
facebook generic

தலிபான் குழுவையும், அதனை ஆதரிக்கும் அனைத்து உள்ளடக்கங்களையும் முகநூல் தடை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலிபான்களை பயங்கரவாத அமைப்பாக கருதுவதை முகநூல் உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தை தலிபான்கள் கைப்பறியுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தக் குழுவோடு இணைக்கப்பட்ட உள்ளடக்கத்தை கண்காணிக்கவும், அகற்றவும் ஆப்கானிஸ்தான் நிபுணர்களின் பிரத்தியேக குழுவொன்று உள்ளதாக முகநூல் நிறுவனம் கூறுகிறது.

அத்துடன், இந்தக் கொள்கையானது, இன்ஸ்டாகிராம் மற்றும் வட்ஸ்அப் உட்பட தமது ஏனைய அனைத்து தளங்களுக்கும் பொருந்தும் என்று முகநூல் தெரிவித்துள்ளது.