கிறிஸ்மஸ் தினத்தில் தம்பதியினரின் புதிய உலக சாதனை!!

world record
world record

350 நத்தார் மரங்களை தமது வீட்டில் வைத்து ஜேர்மனியிலுள்ள ஒரு தம்பதியினர் உலக சாதனை படைத்துள்ளனர்.

ஜேர்மனியின் ஸக்ஸோனி பகுதியிலுள்ள ரின்டெல்ன் நகரில் வசிக்கும் தோமஸ் ஜெரமின் மற்றும் சுசான் ஜெரமின் தம்பதியினரே இந்த உலக சாதனையினை படைத்துள்ளனர்.

2011ஆம் ஆண்டு வரை ஒரு நத்தார் மரத்தையே வீட்டில் வைத்திருந்தனர். ஆனால் 2012ஆம் ஆண்டிலிருந்து நத்தார் மரங்களின் எண்ணிக்கையை இவர்கள் அதிகரித்தனர். தற்போது 180 சதுரமீற்றர் பரப்பளவுள்ள தமது வீட்டில் பல்வேறு இடங்களிலும் மொத்தமாக 350 நத்தார் மரங்களை இவர்கள் வைத்துள்ளனர்.