கஸாகிஸ்தான் விபத்தில் 12 பேர் பலி

6 g
6 g

கஸாகிஸ்தானில் இன்று காலை இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

கஸாகிஸ்தானின் அல்மேட்டி விமானநிலையத்தில் இருந்து பெக் ஏயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானமே இன்று காலை விபத்துக்குள்ளானது. 100 பயணிகளுடன் புறப்பட்ட இந்த விமானம் சில நிமிடங்களில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் 22 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. உயிரிழந்தவர்களில் 6 பேர் சிறுவர்கள் எனவும் சர்வதேச தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.