கடும் குளிரில் தெருவில் இரட்டை குழந்தை பெற்றெடுத்த இளம்பெண்!

103504268 053ad407 96b0 4799 a46b 4f253a5faa5a
103504268 053ad407 96b0 4799 a46b 4f253a5faa5a

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் டிரினிட்டி கல்லூரி அருகாமையில் பெண் ஒருவர் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

குறைமாதத்தில் பிறந்த அந்த இரட்டையர்களுக்கும் தாயாருக்கும் உதவும் வகையில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவி ஒருவர் நிதி திரட்டியதில், பொதுமக்கள் அதிக அளவில் உதவியுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த 23 ஆம் திகதி இரவு குறித்த சம்பவம் நடந்துள்ளது. 30 வயது மதிக்கத்தக்க ஆதரவற்ற கர்ப்பிணி பெண்ணான இவர் கடந்த சில மாதங்களாகவே சாலை ஓரத்தில் தங்கி வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த திங்களன்று டிரினிட்டி கல்லூரி அருகாமையில் இவர் குறைமாதத்தில் இரட்டையர்களை பெற்றெடுத்துள்ளார்.

தகவல் தெரியவந்த பொதுமக்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் சேவைக்கு தெரியப்படுத்தி, தாயாரையும் பிறந்த பிள்ளைகளையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தங்கும் ஜெஸ் என்ற மாணவி குறித்த பெண்ணின் மருத்துவ செலவுக்காக 913 பவுண்டுகள் தேவை என ஒரு அறிவிப்பு ஒன்றை உரிய சமூக வலைதளபக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

நகரின் பணக்கார கல்லூரி என அறியப்படும் டிரினிட்டி கல்லூரி அருகே இச்சம்பவம் நடந்துள்ளது எனவும் ஜெஸ் தமது குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இந்த விளம்பரத்தை அடுத்து பொதுமக்கள் பலர் நிதியுதவி அளித்துள்ளனர்.

தற்போதுவரை 22,913 பவுண்டுகள் குவிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

எதிர்பார்த்ததைவிட அதிக நிதி குவிந்துள்ளதால், அதை பயனுள்ள வகையில் செலவிட முடிவு செய்துள்ளதாக ஜெஸ் தெரிவித்துள்ளார்.

2018-ல் வெளியிடப்பட்ட கணக்குகளின் அடிப்படையில் டிரினிட்டி கல்லூரியின் மொத்த சொத்துமதிப்பு 1.3 பில்லியன் பவுண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.