ஏமன் விமான நிலையம் அருகே நடந்த வெடி விபத்தில் 12 பேர் பலி!

gPpzbKbH
gPpzbKbH

ஏமனின் தெற்கு துறைமுக நகரமான ஏடனின் சர்வதேச விமான நிலையத்தின் நுழைவாயிலுக்கு அருகில் ஏற்பட்ட வெடிப்பில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் பலர் காயம்.

எனினும் இந்த சம்பவம் திட்டமிட்ட தாக்குதலா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

சனிக்கிழமையன்று விமான நிலையத்தின் வெளிப்புற வாயிலில் ஒரு சிறிய டிரக் வெடித்து சிதறியதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறினார். அதே நேரத்தில் அந்த வாகனம் பெட்ரோலிய பொருட்களை ஏற்றிச் சென்றதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. 

வெடிப்பு சம்பவம் பலமாக இருந்தது மற்றும் நகரம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது, இதால் அருகிலுள்ள குடியிருப்புகளின் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கியது.

சம்பவத்தில் காயமடைந்த பலர் உள்ளூர் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏடன் என்பது யேமனின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்தின் தற்காலிக இல்லமாகும். இது சவுதி அரேபியாவின் ஆதரவுடன் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக ஈரானுடன் இணைந்த ஹவுதி குழுவுடன் போராடி வருகிறது.