வெளிநாட்டு நாணயங்களை பயன்படுத்த ஆப்கான்களுக்கு தடை!

foreign currency
foreign currency

ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு நாணயங்களைப் பயன்படுத்த தலிபான்கள் தடை விதித்துள்ளனர். இந்தச் செயற்பாடானது பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள ஆப்கானிஸ்தானை மேலும் வீழ்ச்சி பாதையில் இட்டுச் செல்லக்கூடும் என சர்வதேச பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த அமெரிக்க துருப்பினர் கடந்த ஆகஸ்ட் மாதத்துடன், அங்கிருந்து வெளியேறியிருந்தனர்.

இதனையடுத்து ஆப்கானிஸ்தானை தலிபான்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த நிலையில், இடைக்கால அரசாங்கத்தையும் உருவாக்கினர்.

இதற்கு சீனா, பாகிஸ்தான் தவிர வேறு எந்த நாடும் ஆதரவு வழங்கவில்லை.

சர்வதேச உதவிகள் வழங்கப்படாத நிலையில், ஆப்கானிஸ்தானில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு சூழலிலேயே ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு நாணயத்தைப் பயன்படுத்துவதற்கு தாலிபான்கள் தடை விதித்துள்ளனர்.

நாட்டின் பொருளாதார நிலை மற்றும் தேசிய நலன்கள் தொடர்பில் சிந்தித்து வர்த்தகத்தில் ஆப்கானிய நாணயத்தைப் பயன்படுத்த வேண்டும் என தலிபான் ஊடக பேச்சாளர் சபியுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.