மீண்டும் அணு ஆயூத சோதனை; வட கொரியா அறிவிப்பு

101984897 e749a2b2 4878 4e49 b128 ebd0065e7eca
101984897 e749a2b2 4878 4e49 b128 ebd0065e7eca

அமெரிக்கா வடகொரியாவின் கோரிக்கையை ஏற்காத நிலையில், அந்நாடு (வடகொரியா) மீண்டும் அணு ஆயுத சோதனையில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று அணு ஆயுத சோதனையை முழுமையாக நிறுத்துவதாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்தார். மேலும், உலக நாடுகளுடன் அமைதியாக இணைந்து செயலாற்றும் திட்டத்தையும் முன்னெடுத்தார்.

இதற்கு தங்கள் நாட்டின் மீதான பொருளாதாரத்தடையை நீக்க வேண்டும் என்று கிம் ஜாங் உன் தெரிவித்திருந்தார். ஆனால் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் அணு ஆயுதங்களை தங்களிடம் முழுமையாக ஒப்படைத்தால் மட்மே இது குறித்து பரிசீலிக்க முடியும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், வடகொரிய ராணுவ அதிகாரிகளுடன் பேசிய கிம் ஜாங் உன், இனியும் பொறுமை காப்பதில் அர்த்தமில்லை என்றும், வடகொரியா தயாரிக்கவுள்ள புதிய அணு ஆயுதங்களை உலக நாடுகள் இனி காணும் என்றும் தெரிவித்துள்ளார்.

கிம் ஜாங் உன்னின் இந்த அறிவிப்பால் மீண்டும் கொரிய தீப கற்பத்தில் பதற்றம் ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது.