அவுஸ்ரேலியா காட்டுத்தீ – இதுவரை 7 பேர் பலி

download 4
download 4

அவுஸ்ரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் இந்த வாரத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் நூறுக்கணக்கான வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை முதல் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் கடற்கரையை நோக்கி வந்த காட்டுத்தீயினால் இதுவரை 200 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விக்டோரியாவின் கிழக்கு கிப்ஸ்லேண்டில் உள்ள 43 வீடுகளும் நியூ சவுத் வேல்ஸில் 176 வீடுகளுமே இவ்வாறு சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதேவேளை அவுஸ்ரேலியாவில் சில பகுதிகளில் நிலைமைகள் சற்று குறைந்துவிட்டதாகவும் அந்தவகையில் விக்டோரியாவில் மூடப்பட்ட ஒரு பெரிய வீதி இன்று இரண்டு மணி நேரம் திறக்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் இதுவரை காட்டுத்தீயினால் 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் உயிரிழப்பு ஏற்படலாம் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை முன்னதாக, நியூ சவுத் வேல்ஸ் கிராமப்புற தீயணைப்பு சேவை இந்த காட்டுத்தீ காரணமாக 916 வீடுகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 363 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், 8,159 பேர் மாற்று இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.