மரியா ஷரபோவா, பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடரில் பங்கேற்ப்பு

download 5
download 5

ரஷ்யாவின் புகழ்பெற்ற டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா, இந்தமுறை பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடரில் பங்கேற்கவுள்ளார்.

32 வயதான அவர், கடந்த ஆண்டு காயம் காரணமாக 15 போட்டிகளில் மாத்திரமே விளையாடி இருந்தார்.

ஐந்து முறை க்ராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள அவர், ஊக்கமருந்து பாவனை குற்றச்சாட்டில் தடை விதிக்கப்பட்டு பின்னர் மீண்டும் விளையாட ஆரம்பித்து, கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் அமெரிக்க பகிரங்க தொடரின் முதல் சுற்றில் விளையாடி இருந்தார்.

இந்த நிலையில், இந்தமாதம் ஆரம்பமாகின்ற பிரிஸ்பேன் சர்வதேச போட்டிகளில் தாம் விளையாடவிருப்பதாகவும், அதுகுறித்து தாம் எதிர்பார்ப்புடன் இருப்பதாகவும் மரியா ஷரபோவா அறிவித்துள்ளார்.