20க்கு20 தொடர் எதிர்வரும் 5ஆம் திகதி ஆரம்பம்

download 6
download 6

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகளை கொண்ட 20க்கு20 தொடர் எதிர்வரும் 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இருப்பினும், குறித்த தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி குழாம் இதுவரையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

தற்போது இலங்கை அணி வீரர்கள் பயிற்சிகளில் ஈடுபட்டுவரும் அதேவேளை, இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவன் பிரதீப் காயம் காரணமாக மேற்படி தொடரிலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவருக்கு பதிலாக கசுன் ரஜித்த அணிக்கு உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.