மியன்மாரில் இராணுவத்தினரால் 40 பேர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு கொலை!

myanmar military coup
myanmar military coup

மியன்மார் இராணுவத்தினரால் கடந்த ஜூலை மாதம் சுமார் 40 பொதுமக்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் கொல்லப்பட்டதாக நிரூபனமாகியுள்ளது.

கிராமங்கள் சுற்றிவளைக்கப்பட்டு ஆண்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், இந்த வன்செயல்கள் இடம்பெற்றுள்ளன.

இது போன்ற சம்பவங்கள் நான்கு பிரதேசங்களில் பதிவாகியுள்ளன.

மியன்மார் எதிர்க்கட்சியினரின் கோட்டை என கருதப்படும் சங்கேயினிங் மாவட்டத்திலேயே இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

நேரில் கண்டவர்கள் மற்றும் தாக்குதலில் இருந்து தப்பியவர்கள் இது குறித்து பல தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பாக மியன்மார் இராணுவத்தின் பேச்சாளர் மறுப்பு எதனையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.