நீண்ட வரிசைகளில் நிற்கும் மக்கள்;அதிர வைக்கும் பின்னணி

625.0.560.380.280.600.660.800.668.160.90
625.0.560.380.280.600.660.800.668.160.90

அமெரிக்காவின் இல்லினாயிஸ் மாகாணத்திலுள்ள மருந்து கடைகள் முன் நூற்றுக்கணக்கானோர் மிக நீண்ட வரிசைகளில் நிற்கும் காட்சிகள் வெளியாகின. அவர்கள் நிற்பது மருந்து வாங்குவதற்காக அல்ல.

அவர்கள் கஞ்சா வாங்குவதற்காக அப்படி நீண்ட வரிசைகளில் நிற்கிறார்கள். ஜனவரி 1 முதல், அமெரிக்காவின் இல்லினாயிஸ் மாகாணத்தில் சட்டப்படி இன்பத்திற்காக கஞ்சா விற்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அந்த கஞ்சாவை வாங்குவதற்காகத்தான் மக்கள் கடை திறப்பதற்கு வெகு நேரம் முன்பே கடைகள் முன் நீண்ட வரிசைகளில் நிற்கிறார்கள்.

இது போதாதென்று, கவர்னர் ஜேபி பிரிட்ஸ்க்கெற் கஞ்சா தொடர்புடைய குற்றங்களில் ஈடுபட்ட 11,000 பேருக்கு மன்னிப்பும் வழங்கியுள்ளார்.