அமெரிக்கர்கள் ஈராக்கை விட்டு உடனடியாக வெளியேற உத்தரவு

usa flag
usa flag

ஹிஸ்புல்லா ஆதரவாளர்கள் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு தூதரகத்தை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதனை கண்டித்து ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் மீது அமெரிக்காவினால் ராக்கெட் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

அமெரிக்கா நடத்திய வான் தாக்குதலில் ஈரானின் முக்கிய இராணுவ தளபதியான காசிம் சோலிமானி, கிளர்ச்சியாளர் குழுவின் முக்கிய கமாண்டர் அபு மகாதி உள்ளிட்ட 7 பேர் கொல்லப்பட்டனர்.

இதனால் ஈரான்-அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. எந்த நேரத்திலும் ஈரான் தாக்குதல் நடத்தலாம் என கூறப்படுகிறது.

இதனையடுத்து ஈராக்கில் உள்ள அமெரிக்க மக்கள் அனைவரும் உடனடியாக வெளியேறும்படி அமெரிக்க தூதரகம் உத்தரவிட்டுள்ளது.

‘அமெரிக்க குடிமக்கள் முடிந்த வரை விமானத்தில் செல்ல வேண்டும். அது முடியாதபட்சத்தில், தரை மார்க்கமாக மற்ற நாடுகளுக்கு செல்ல வேண்டும்’ என அமெரிக்க தூதரகம் செய்தி வெளியிட்டுள்ளது.