அமெரிக்காவில் இ-சிகரெட்டுக்கு தடை!

e cigrarate
e cigrarate

அமெரிக்காவில் குறிப்பிட்ட வகை இ-சிகரெட்டுகளுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

புதினா மற்றும் பழங்களின் சுவை கொண்ட இ-சிகரெட்டுகளை விற்பனை செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் அண்மை காலமாக இ-சிகரெட்டை புகைக்கும் நபர்களுக்கு நுரையீரல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டு வருகின்றன.

இ-சிகரெட் தொடர்பான நோய் காரணமாக இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளனர்.

2,500 இற்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இ-சிகரெட்டை பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல என்றும், அதில் இருந்து இளைஞர்கள் விலகியிருக்க வேண்டும் என்றும் அமெரிக்க வைத்தியர்கள் கூட்டமைப்பு எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.