கிளியின் கதறலால் காப்பாற்ற வந்த பொலிஸார்!

usa 2
usa 2

அமெரிக்காவில் என்னை வெளியே விடு என கீச்சிட்ட கிளியின் குரலை கேட்டு பக்கத்து வீட்டு பெண் ஒருவர் பொலிஸாருக்கு தகவல் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஒரு வீட்டிலிருந்து ‘என்னை வெளியே விடு என்னை வெளியே விடு’ என கேட்ட சத்தத்தை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், அது பற்றி விசாரித்தனர். அதனையடுத்து வீட்டின் உரிமையாளர் வீட்டிற்குள் சென்று தனது செல்லப்பிராணியான கிளியுடன் வெளியில் வந்தார்.

கிளிதான் என்னை வெளியே விடு என கீச்சிட்டது என்பதை அறிந்ததையடுத்து அந்த பொலிஸாரும், தகவல் அளித்த அண்டை வீட்டு பெண்ணும் புன்னகைத்தபடியே திரும்பி சென்றனர்.

இது குறித்து கிளியின் உரிமையாளர் கூறுகையில்,

‘40 ஆண்டுகளாக இந்த கிளி எனது வீட்டில் உள்ளது. நான் சிறுவனாக இருந்த போது இந்த கிளியை கூண்டிற்குள் வைத்திருந்தேன். அப்போது என்னை வெளியே விடு என்று கூற கிளிக்கு கற்றுக்கொடுத்தேன். சில சமயங்களில் கிளி இவ்வாறு கீச்சிடும்’ என தெரிவித்தார்.