மது அருந்திய பன்றிகள் – ருசிகர தகவல்

drink
drink

ரஷ்யாவின் பல்பொருள் அங்காடியினுள் நுழைந்த 3 பன்றிகள் மது போத்தல்களை தட்டிவிட்டு தரையில் சிந்திய மதுவை குடித்த வீடியோ வைரலாகி வருகிறது.

மது இருக்கும் இடத்தை பன்றிகள் மோப்பம் பிடித்து அவற்றை அருந்திய வினோத சம்பவம் ரஷ்யாவில் நிகழ்ந்துள்ளது.

ரஷ்யாவின் சைபீரியா பிராந்தியத்தில் உள்ள பல்பொருள் அங்காடியினுள் 3 பன்றிகள் நுழைந்தன. ஆனால் அங்கிருந்தவர்கள், பன்றிகள் என்ன செய்கின்றன என்பதை காண்பதற்காக அவற்றை விரட்டாமல் வீடியோ எடுத்தனர்.

பலசரக்கு பொருட்கள் இருந்த ஒவ்வொரு அடுக்காக மோப்பம் பிடித்துக்கொண்டே உள்ளே சென்ற பன்றிகள் மதுபாட்டில்கள் இருந்த அடுக்குகளை கண்ட பின் அதிலிருந்த இரண்டு மது போத்தல்களை கீழே தள்ளிவிட்டு பின்னர் தரையில் சிந்திய மதுவை குடிக்க தொடங்கின.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.