ககன்யான் திட்டத்திற்கு தேர்வான விண்வெளி வீரர்களுக்கு ரஷ்யாவில் பயிற்சி

kakanyan
kakanyan

‘ககன்யான்’ திட்டத்தில் விண்வெளிக்கு செல்ல தேர்வான 4 இந்திய விண்வெளி வீரர்களுக்கு 11 மாதங்கள் ரஷ்யாவில் பயிற்சியளிக்க உள்ளதாக மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

இம்மாதம் 3-வது வாரத்தில் பயிற்சி தொடங்குகிறது. 11 மாத பயிற்சி முடிந்து திரும்பிய பிறகு, இந்தியாவிலும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

விண்கலத்தில் விண்வெளி வீரர்கள் பயணம் செய்யும் பகுதி சார்ந்த பயிற்சி அளிக்கப்படும். அந்த சாதனத்தை எப்படி இயக்குவது? எப்படி பணியாற்றுவது? உள்ளிட்ட பயிற்சிகளை அவர்கள் பெறுவார்கள்

இந்தியா முதல்முறையாக விண்வெளிக்கு மனிதனை அனுப்ப உள்ளது. 10 ஆயிரம் கோடி செலவிலான இத்திட்டத்துக்கு ‘ககன்யான்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தையொட்டி இத்திட்டம் 2022ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.