வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கி சூடு!

100265433 mediaitem100262317
100265433 mediaitem100262317

அமெரிக்காவின் – வோஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஐவர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெள்ளை மாளிகையிலிருந்து சுமார் 3 கீலோ மீற்றர் தூரத்தில் உள்ள கொலம்பியா ஹைய்ட் எனும் பகுதியிலேயே நேற்றிரவு மேற்படி துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

சாலையில் சென்றவர்கள் மீது திடீரென ஒருவர் சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டு தலைமறைவாகியுள்ளார்.

இதன்போது ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மேலும் ஐவர் சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸாரால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், தலைமறைவாகியுள்ள சந்தேக நபரை தேடும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.