கொரோனாவை எதிர்க்க உலகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் – உலக சுகாதார மையம்

world health organization
world health organization

கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவதற்கு முழு உலகமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவரான மைக் ரயன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொரொனா வைரஸ் தாக்கம் குறித்து
விவாதிப்பதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் இன்று அவசரமாக கூடவுள்ளது.

அந்த வைரஸ் தாக்கமானது உலகலாவிய சுகாதார அவசர
நிலையா என்பது குறித்து இதன்போது விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 170 ஆக அதிகரித்துள்ளது என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சீனா உட்பட தாய்லாந்து, ஹொங்கொங், ஜப்பான், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், மெகோ, மலேசியா, தென்கொரியா, தாய்வான் கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவதற்கு முழு
உலகமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

பிரான்ஸ், வியட்நாம், கனடா, ஜேர்மனி,
கம்போடியா, நேபாளம் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இலங்கை 18 இற்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது.

இந்நிலையில், குறித்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.