கென்யாவின் முன்னாள் ஜனாதிபதி காலமானார் !

1 dies
1 dies

24 ஆண்டுகளாக நாட்டை ஆண்ட கென்யாவின் முன்னாள் ஜனாதிபதி டானியல் அரப் மோய் தனது 95ஆவது வயதில் காலமாகியுள்ளதாக ஜனாதிபதி உகுரு கென்யாட்டா இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்தார்.

கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அரப் மோய், உயிரிழந்த செய்தியை அவரது குடும்பத்தினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அரப் மோய் மறைவு குறித்து ஜனாதிபதி உகுரு கென்யட்டா கூறுகையில், “எமது அரசும் எமது கண்டமும் மறைந்த டேனியல் அரப் மோய்யால் ஆசிர்வதிக்கப்பட்டன. அவர் வாழ்நாள் முழுவதும் கென்யாவுக்காக சேவை புரிந்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அரப் மோய் காலமானதையிட்டு இறுதிக் சடங்கு நடைபெறும் வரை தேசிய துக்கம் அறிவிக்கப்படுவதாகவும் அனைத்து அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும் என்றும் அவ்ர அறிவித்துள்ளார்.

கென்யாவின் ஜனாதிபதியாக 1978ஆம் ஆண்டு பதவியேற்ற அரப் மோய் 2002 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து பதவியில் இருந்தார். மோய் தனது ஆட்சிக் காலத்தில் கென்யாவில் வறுமை அதிகரித்தற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.