கோரோனோவுக்கு இத்தாலியில் 109 பேர் பலி

3 b
3 b

இத்தாலி நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ள நிலையில் நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான இத்தாலியில் கொரோனா தாக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், 3 ஆயிரத்து 89 பேருக்கு வைரஸ் பரவியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்துவருவதையடுத்து இத்தாலியில் உள்ள அனைத்து பள்ளிகளையும் வரும் 15 -ம் திகதி வரை மூட அந்நாட்டு கல்வித்துறை மந்திரி உத்தரவிட்டுள்ளார்.