செல்லப் பிராணிகள் மூலம் கொரோனா !

19
19

ஹோங்காங்கில் வளர்ப்பு நாய் ஒன்றுக்கு லேசான கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம், இதுவரை மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவிவரும் இந்த வைரஸ், விலங்குகளிடமிருந்தும் பரவுமோ என்ற பீதி ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ஹாங்காங்கின் விலங்கியல் ஆய்வாளர்கள் கூறுகையில், ‘‘, நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகள் மூலமாக வைரஸ் தொற்று மனிதனுக்கு பரவாது.

ஆனால், மனிதனிடருந்து இந்த வைரஸ் செல்லப் பிராணிகளுக்கு பரவும். எனவே செல்லப் பிராணி வளர்ப்பவர்கள் சுத்தமாக இருக்க அறிவுறுத்தி உள்ளனர்.

வீட்டில் யாருக்கேனும் வைரஸ் தொற்று இருந்தால், செல்லப் பிராணிகளிடம் போக்க்கூடாது’’ என்று கூறியுள்ளனர்.