கொரோனா வைரசால் தொடரும் உயிரிழப்புகள்!!

q s
q s

இந்தியாவில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

அதே போல் இத்தாலியில் 148 பேரும், தென் கொரியாவில் 43 பேரும் உயிரிழந்துள்ளனர்.

எட்டுத் திக்கும் பரவும் கொரோனா சீனாவின் ஹூபெய் மாகாணம், வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.

இதுவரை 80 நாடுகளில் இந்த வைரஸ் பாதித்துள்ளது.

இதுவரை உலக முழுவதும் 98,424 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் மட்டும் 3042 பேர் பலியாகி உள்ளனர்.

உலகம் முழுவதும் 3,386 பேர் பலியாகி உள்ளனர்.

55,638 பேர் இந்த நோயில் இருந்து குணமாகி உள்ளனர்.

இந்தியாவில் டெல்லி, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் 30 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தமிழ்நாடு, கர்நாடகா, மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களும் சிலரைத் தனிமைப்படுத்தியுள்ளன.

தற்போது டெல்லியில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 31 ஆக உயர்ந்து உள்ளது.