ஐரோப்பா மருத்துவர்களும் அந்த தவறையே செய்கிறார்கள் ; நிபுணர்கள் எச்சரிக்கை

corona7
corona7

கொரோனா வைரஸ் பாதிப்புகள் ஐரோப்பாவில் தினசரி அதிகரித்துவருகிறது. இந்நிலையில் முதன்முதலாக தொற்றுநோய் பரவிய சீனாவின் வுஹானில் உள்ள மருத்துவர்கள் செய்த அதே தவறுகளையே திரும்ப திரும்ப ஐரோப்பிய மருத்துவர்கள் செய்வதாகவும் , இது ஆபத்தில் முடியும் என்றும் நிபுணர்கள் கவலைகளை வெளிப்படுத்தி உள்ளனர்

சீனாவின் பெய்ஜிங்கில் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் அதற்கு சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்து திங்கள்கிழமை பல்வேறு மருத்துவர்கள் குழு விவாதித்தது.

இதில் பீக்கிங் யூனியன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் காஸ்ட்ரோ-என்டாலஜி பேராசிரியர் வு டோங் தனது கவலையை வெளிப்படுத்தினார்.

அவர்கள் வெளிப்படுத்திய கவலைகளில் முக்கியமானது மருத்துவ பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை.

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடையே அதிக தொற்று விகிதத்திற்கு வழிவகுக்கிறது.

வுஹானில், ஜனவரி மாதத்தில் கொரானா பரவிய ஆரம்ப வாரங்களில் இந்த நோயைப் பற்றிய புரிதல் இல்லாமை மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் பற்றாக்குறை ஆகியவை நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் போது ஆயிரக்கணக்கான சுகாதாரப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாகே மட்டுமே குறைந்தது 46 பேர் உயிரிழந்தனர்.

வுகானில் கொரோனா பரவிய ஆரம்ப காலத்தில் இருந்தது போன்ற ஒரு சூழலில் தான் இப்போது ஐரோப்பியாவும் உள்ளது. ஐரோப்பியாவில் எங்களின் சாகாக்கள் அன்றாடம் சிகிச்சை அளித்து நோயைக் குறைத்து வருகின்றனர், அங்கு மருத்துவர்களை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மருத்துவ பணியாளர்களின் எண்ணிக்கை முக்கிய மேற்கத்திய நாடுகள் எதிர்கொள்ளும் நெருக்கடி ஆகும், அங்கு வைரஸ் இப்போது வேகமாக பரவி வருகிறது. இத்தாலியில் இருந்து அமெரிக்கா வரை, மருத்துவமனைகளில் முகமூடிகள் போன்ற பாதுகாப்பு மருத்துவப் பொருட்களின் பற்றாக்குறையை உள்ளதாக பல்வேறு நாடுகள் தெரிவிக்கின்றன, அதே நேரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நோயாளிகளின் சுமை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை அதிகமாகக் தாக்குகிறது.. வைரஸின் மிகவும் தொற்று தன்மை என்பது கண்களின் வழியே அசாதாரண வழிகளில் பரவுவதற்கான அறிகுறிகளைக் காட்டியுள்ளது .