170 தமிழக மாணவர்கள் இந்தியா திரும்பினர்

d9
d9

கோலாலம்பூரில் தவித்து வந்த 170 தமிழக மாணவர்கள் பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்கள் அனைவரும் விசாகப்பட்டினத்தில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்புக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.

பிலிப்பைன்ஸில் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் மருத்துவ படிப்பு படித்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தாக்குதலில் இந்த மாணவர்கள் தாயகம் திரும்ப முயன்றனர்.

ஆனால் உரிய விமான வசதியின்றி மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்திலேயே 170 மாணவர்களும் தவித்து வந்தனர்.

இவர்களை மீட்க மத்திய அரசு உதவ வேண்டும் என்று தமிழகத்தில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனையடுத்து 170 தமிழக மாணவர்களையும் மீட்க இந்திய அரசு சிறப்பு விமானத்தை அனுப்பி வைத்தது.

இந்த மாணவர்கள் அனைவரும் இன்று ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் வந்தடைந்தனர்.

விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் இருந்து கொரோனா வைரஸ் கண்காணிப்பு மையங்களுக்கு 170 மாணவர்களும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு 14 நாட்கள் கண்காணிப்புக்குப் பின்னர் கொரோனா பாதிப்பு இல்லாத மாணவர்கள் சொந்த ஊருக்கு திரும்ப அனுமதிக்கப்படுவர்.

இதனிடையே எஞ்சியுள்ள 130 மாணவர்களும் நாளை இந்தியாவுக்கு அழைத்துவரப்பட இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.