நிரூபிக்க முடியாது – இந்த வைரஸ் வுஹனில் தோன்றவில்லை!!

full 1
full 1

கொரோனா வைரஸ் சீனாவில் இருக்கும் வுஹன் நகரத்தில் தோன்றி இருக்க வாய்ப்பு இல்லை என்று சீன மருத்துவர்கள் குழு தெரிவிக்கிறது.

கொரோனா வைரஸ் யாருமே எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய வேகத்தில் பரவி வருகிறது. சீனாவில் மட்டும் இந்த வைரஸ் 80,928 பேர் வரை பாதித்து இருக்கிறது.

அங்கு இதுவரை 3,245 பேர் வரை பலியாகி உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக இத்தாலியில் இந்த வைரஸ் 35,713 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு இதுவரை 2978 பேர் இந்த வைரஸால் பலியாகி உள்ளனர். இந்த கொடூரமான கொரோனா வைரஸ் இந்தியாவில் மொத்தம் 177 பேருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் சீனாவில் தோன்றியது ஆகும்.

கொரோனா சீனாவில் உள்ள வுஹன் நகரத்தில் தோன்றி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அங்கு இருக்கும் மீன் சந்தை ஒன்றில் வைரஸ் தோன்றி இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

இல்லையென்றால் வுஹன் வைராலஜி ஆராய்ச்சி மையத்தில் இருந்து வைரஸ் கசிந்து வெளியாகி இருக்கலாம் என்கிறார்கள்.

அதே சமயம் இந்த வைரஸ் வௌவாலில் இருந்து கூட உருவாகி இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

ஆனால் எச்1என்1 வைரஸ் உண்மையில் மெக்சிகோவில் உருவானது கண்டுபிடிக்கப்பட்டது.

மிகவும் தாமதமாகத்தான் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டது. அதேபோல் மெர்ஸ் வைரஸ் சவுதி அரேபியாவில் உருவானது.

அப்போதும் கூட சீனாவை பலர் குற்றஞ்சாட்டினார். எச்1என்1 வைரஸை யாரும் மெக்சிகோ வைரஸ் என்று கூறவில்லை. மெர்ஸ் வைரஸை யாரும் அரேபியா வைரஸ் என்று கூறவில்லை.

ஆனால் இந்த கொரோனா வைரஸை மட்டும் ஏன் இப்படி வுஹன் வைரஸ் என்று அழைக்கிறார்கள் என்று தெரியவில்லை.

இந்த வைரஸ் சீனாவில் உருவானது என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. யாரும் ஒரு சின்ன ஆதாரம் கூட இதற்கு கொடுக்கவில்லை.

எப்படி வேண்டுமானாலும் இந்த வைரஸ் சீனாவிற்கு வந்து இருக்கலாம். இது அறிவியல். இதை ஆராய்ச்சி செய்ய வேண்டும். அதைவிட்டுவிட்டு, இன வெறியுடன் சீனா மீது பலர் புகார் வைக்கிறார்கள் என்று, இவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.