கனடா பிரதமர் அசத்தல் அறிவிப்பு

1 justin 6
1 justin 6

எந்த ஒரு தொழில் நிறுவனமும், கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக, பணியாளர்களை நீக்கி விடக்கூடாது என்பதற்காக அடுத்த மூன்று மாதங்களுக்கு ஊதியத்திற்கான, மானியத்தை அரசு வழங்கும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சீனாவின் வூகான் மாகாணத்தில் தொடங்கிய, கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளுக்கும் பரவி வருகிறது. இதனால் உலகத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளும் இதில் தப்பவில்லை. உலகின் ஒன்பதாவது மிகப்பெரிய பொருளாதார நாடு இத்தாலி மிகப் பெரிய பேரழிவை சந்தித்துள்ளது.

இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு பரவலாக உள்ளது. எனவே பல்வேறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய நிறுவனங்கள் வரை தொழிலாளர்களுக்கு சம்பளம் கொஇதனால் பணியிழப்புகள் அதிகரித்து மொத்த பொருளாதாரமும் பெரும் மந்த நிலைக்கு போகக் கூடிய சூழல் எழுந்துள்ளது. இந்த நிலையில் கனடா பிரதமர் ஒரு அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

நீங்கள் சிறு அளவிலான தொழில் நடத்தி வந்தால் உங்களுக்கு மூன்று மாதங்களுக்கு தற்காலிகமாக ஊதிய மானியத்தை அரசு வழங்கும். இதன் மூலமாக உங்கள் ஊழியர்களுக்கு நீங்கள் சம்பளம் வழங்க முடியும். இந்த பிரச்சனை காரணமாக யாரும் வேலையை இழந்து விடக்கூடாது என்பதற்காக அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.டுக்க முடியாத நிலைமைக்கு உள்ளாகியுள்ளன.

கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக உங்கள் தொழிலில் நசிவு ஏற்பட்டால், அதை கனடா ஏற்றுமதி நிதியகம் உதவி செய்து சரி செய்யும். விவசாயிகள் நமது துவக்கநிலை உணவு உற்பத்தியாளர்கள். அவர்கள் உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்காக, விவசாயகடன் அதிகரிக்கப்படும். நீங்கள் எங்கே இருந்தாலும், என்ன செய்து கொண்டு இருந்தாலும், முதலில் உங்களது ஆரோக்கியத்தில் கவனம் வையுங்கள். உங்களது வேலை இழக்கப்படும், மருந்துகள் கிடைக்காது, உணவுப் பொருட்கள் கிடைக்காதோ என்று அச்சப்படாதீர்கள்.

அந்த அச்சத்தை போக்குவதற்காகத்தான், கனடா அரசு இதுபோன்ற முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நீங்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தாலோ, அல்லது சிகிச்சையில் இருந்தாலோ, அரசு அவசரகால உதவியின் கீழ் இரண்டு வாரங்களுக்கு உங்கள் குடும்பத்தினருக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கும். இவ்வாறு கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.