பில் கேட்ஸ் நிதியுதவியில் கொரோனா தடுப்பூசி – முதல் நபருக்கு பரிசோதனை

625.500.560.350.160.300.053.800.748.160.70 1
625.500.560.350.160.300.053.800.748.160.70 1

பில் கேட்ஸ் நிதியளித்து தயார் செய்யப்பட்ட கொரோனா தடுப்பூசியை பயன்படுத்தி முதல் நபருக்கு பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் Missouriல் தான் இந்த பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது. பில்கேட்ஸின் The Bill and Melinda Gates Foundation நிதியின் கீழ் இந்த தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டது.

கொரோனா தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள இந்த தடுப்பூசி தயார் செய்யப்பட்டுள்ளது.

மொத்தமாக 40 ஆரோக்கியமான தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.

பின்னர் தடுப்பூசியை செலுத்தி கொண்டவர்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள்.

இந்த பரிசோதனை ஆராய்ச்சி சிறப்பாக நடந்தாலும், தடுப்பூசிகள் பரவலாகக் கிடைப்பதற்கு ஒரு வருடம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு தன்னார்வலருக்கும் நான்கு வார இடைவெளியில் இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.