கொரோனாவால் ஆயுள் கைதிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்: சிறையிலிருந்து 2 மாத விடுமுறை!

haseen 696x392 1
haseen 696x392 1

சாட் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஹிசீன் ஹப்ரேக்கு செனகலில் உள்ள நீதிமன்றம் ஒன்று சிறையில் இருந்து இரண்டு மாத விடுப்பு வழங்கியுள்ளது .

மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக ஹிசீன் ஹப்ரே ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார்.

இந்நிலையில், அந்த சிறைச்சாலையை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களிற்கான தனிமைப்படுத்தல் மையமாக மாற்றப்படவுள்ளதால் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

1982 முதல் 1990 வரை சாட் நாட்டை ஆட்சி செய்த ஹப்ரே, 2016 ல் செனகல் தலைநகர் டக்கரில் ஆபிரிக்க ஒன்றிய ஆதரவுடன் நடந்த விசாரணையில் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் தண்டனை பெற்றார்.