6 வாரங்களில் இல்லாத அளவிற்கு சீனாவில் வேகமாக பரவும் கொரோனா !

4 3
4 3

ஏறக்குறைய ஆறு வாரங்களில் இல்லாத அளவிற்கு சீனாவில் அதிக எண்ணிக்கையிலான (108) மக்கள் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று பாதிக்கப்பட்டனர்.

சீனாவில் கடந்த ஆறு வாரங்களுக்கு பிறகு முதல்முறையாக ஒரே நாளில் 108 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ரஷ்யாவின் எல்லையான சீனாவின் வடகிழக்கு ஹீலோங்ஜியாங் மாகாணம் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக வேகமாக மாறி வருகிறது.

அங்கு தான் ஒவ்வாரு நாளும் கொரோனாவால் பாதிக்கப்பபடுவது எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

இந்த எண்ணிக்கை ஆறு வாரங்களில் இல்லாத அளவு ஆகும். இப்படி கொரோனா வைரஸ் திடீரன அதிகம் பாதிக்க வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தான் காரணம் என்று கூறப்படுகிறது.

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களால் கொரோனா பாதிப்பு அதிகரிப்பது, கொரோனா வைரஸ்க்கான இரண்டாவது அலைகளைத் தூண்டி, நாட்டை மீண்டும் முடக்கும் நிலைக்குத் தள்ளக்கூடும் என்று சீனா அஞ்சுகிறது.

சீனாவின் பிரதான நிலப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மொத்தம் 108 புதிய கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சனிக்கிழமை அன்று 99 பேர் பாதிக்கப்பட்டனர். கடைசியாக மார்ச் 5 ஆம் திகதி 143 பேருக்கு கொரோனா நோய்த்தொற்றுகள் இருப்பதாக பதிவாகியதிலிருந்து, அதன்பிறகு தற்போதுதான் அதிக எண்ணிக்கையிலான பாதிப்பு பதிவாகி உள்ளது.

இதில் 98 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்று தேசிய சுகாதார ஆணையம் ரஷ்யாவிலிருந்து ஹிலோங்ஜியாங் மாகாணத்திற்குள் நுழைந்த சீனர்களால் கொரோனா பரவியதாக புகார் எழுந்துள்ளது.

அப்படி வந்த 49 சீன நாட்டினருக்கு கொரோனா இருப்பது சோதனையில் உறுதியாகி உள்ளது.