இன்றுவரை உலகளவில் பலியானோர் எத்தனைபேர் தெரியுமா?

1 1 2
1 1 2

அமெரிக்காவில் 23,640; இத்தாலியில் 20,465; இங்கிலாந்தில் 11,329 பேர் கொரோனாவால் பலி

மெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23,640 ஆக உயர்ந்துள்ளது. இத்தாலியில் 20,465; இங்கிலாந்தில் 11,329 பேர் கொரோனாவால் பலியாகி இருக்கின்றனர்.

கொரோனா கொள்ளை நோய்க்கு இதுவரை உலக அளவில் மொத்தம் 19,24,314 பேர் பாதிக்கப்பட்டிருகின்றனர். மொத்தம் 1,19,655 பேர் கொரோனாவால் உயிரிழந்திருப்பது உலக நாடுகளை நிலைகுலைய செய்திருக்கிறது. அமெரிக்காவில்தான் மிக அதிகபட்சமாக 23,640 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்திருக்கின்றனர்.

இங்கு மொத்தம் 5,86,941 பேர் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அமெரிக்காவுக்கு அடுத்ததாக இத்தாலியில் உயிரிழப்பு அதிகம். இத்தாலியில் மொத்தம் 20,465 பேர் கொரோனா நோயால் மாண்டு போயுள்ளனர். இதனையடுத்து ஸ்பெயினில் 17,756 பேரும் பிரான்ஸில் 14,967 பேரும் கொரோனாவுக்கு பலியாகி இருக்கின்றனர்.

இங்கிலாந்திலும் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்திருக்கிறது. இங்கிலாந்தில் இதுவரை மொத்தம் 11,329 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 88,621 ஆகும்.

கொரோனா வைரஸ் பரவ காரணமாக இருந்த சீனாவில் உயிரிழப்பு எண்ணிக்கை மொத்தம் 3,341 ஆக உள்ளது. ஈரானில் 4,585, பெல்ஜியத்தில் 3,903 , நெதர்லாந்தில் 2,823 பேர் கொரோனாவுக்கு இரையாகி உள்ளனர்.