கொரோனா பற்றி முதல்முறையாக மௌனம் கலைத்த வுஹன் சோதனை மையம்!

60 ff
60 ff

கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து நிறைய கேள்விகள், சந்தேகங்கள் பரவி வரும் நிலையில் கொரோனா வைரஸ் குறித்து வுஹன் ஆராய்ச்சி மையம் முதல்முறையாக மௌனம் கலைத்துள்ளது.

கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து பெரிய அளவில் உலகம் முழுக்க சந்தேங்கங்களும் கேள்விகளும் எழுந்துள்ளன.

இந்த கொரோனா வைரஸ் இயற்கையானது, வுஹன் சந்தையில் இருந்து இந்த வைரஸ் வெளியாகி உள்ளது என்று சீனா கூறி வருகிறது.

ஆனால் இந்த கொரோனா வைரஸ் சீனாவில் உள்ள வுஹன் ஆராய்ச்சி மையத்தில் இருந்து வெளியாகி இருக்கலாம் என்று குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

சீனாவில் உள்ள வுஹன் உயிரியல் ஆராய்ச்சி மையத்தில் இருந்து இந்த வைரஸ் வெளியாகி இருக்கலாம். அங்கிருந்து ஊழியர்கள் மூலம் இந்த வைரஸ் கசிந்து இருக்கலாம் என்று குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

இந்த கொரோனா வைரஸ் தோற்றம் குறித்து அமெரிக்கா விசாரிக்க தொடங்கி உள்ளது. வுஹன் உயிரியல் ஆராய்ச்சி மையத்தில் இருந்து வைரஸ் கசிந்து இருக்கலாம் என்று அமெரிக்கா வெளிப்படையாக குற்றம்சாட்ட தொடங்கி உள்ளது.

சீனா இது தொடர்பான விஷயங்களை மறைகிறது. கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து சீனா வேண்டும் என்றே மறைத்து இருந்தால் அந்த நாடு மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

எங்கள் ஆராய்ச்சி மையத்தில் யாருக்கு இதுவரை கொரோனா வைரஸ் தாக்கவில்லை. அப்படி இருக்கும் போது எங்கள் ஆராய்ச்சி மையத்தில் இருந்து இந்த வைரஸ் வெளியாகி இருக்கலாம் என்று கூறுவது தவறு. நாங்கள் கொரோனா குறித்து நிறைய ஆராய்ச்சிகளை செய்து வருகிறோம். பல்வேறு வகையான வைரஸ் ஆராய்ச்சிகளை செய்து வருகிறோம்.

எங்கள் ஆராய்ச்சி மையம் மிகவும் பாதுகாப்பானது. இங்கிருந்து எந்த விதமான வைரஸ் வெளியேறவும் வாய்ப்பு இல்லை. தேவையில்லாமல் இந்த வதந்திகளை நம்ப வேண்டாம். அதற்கு வாய்ப்பே இல்லை. எங்களுக்கு என்ன ஆராய்ச்சிகளை செய்கிறோம் என்று தெரியும். அதை எப்படி செய்கிறோம் என்றும் தெரியும். எங்கள் ஆராய்ச்சி மையம் வுஹனில் இருக்கிறது என்பதாலேயே அதை கொரோனாவுடன் தொடர்பு படுத்த கூடாது.

மக்களை தவறாக சிலர் வழி நடத்துகிறார்கள். அமெரிக்க ஊடங்கங்கள் பொய்யான செய்திகளை வெளியிடுகிறது. அல்லது ஆதாரம் இல்லாத செய்திகளை வெளியிடுகிறது. கொரோனா குறித்தோ அல்லது இந்த ஆராய்ச்சி மையம் குறித்தோ எங்களுக்கு மறைக்க ஒன்றும் இல்லை. நாங்கள் பொதுவான வைரஸ் ஆராய்ச்சிகளை செய்து வருகிறோம். இது தொடர்பாக உலக சுகாதார மையத்திடம் அறிக்கை சமர்பித்துள்ளோம் என்று பி4 லேபின் இயக்குனர் யுவான் சிமிங் தெரிவித்துள்ளார்.