உலகில் 4 நாடுகளில் மட்டும் 1லட்சம் பேர் பலி!

2 f 3
2 f 3

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் 24,80,503 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதில் உலகில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.70 லட்சத்தை தாண்டி உள்ளது. உலகிலேயே நேற்று அதிகபட்சமாக அமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 1939 பேர் உயிரிழந்தனர்.

கொரோனா வைரஸ் தொற்று ஒவ்வொரு நாளும் அதிவேகமாக பரவி வருகிறது. தடுப்பு மருந்துகளோ, தடுப்பு ஊசியோ இல்லாத நிலையில் இதை கட்டுப்படுத்துவது உலக வல்லரசு நாடுகளுக்கே பெரும் சவாலாக உள்ளது. ஐரோப்பாவின் அனைத்து நாடுகளும், அமெரிக்காவும், இங்கிலாந்தும் மிக மோசமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட ஐந்து நாடுகளில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.16லட்சத்தை தாண்டி உள்ளது.

அமெரிக்காவில் மட்டும் 42514 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது சுமாராக மொத்த உலக அளவிலான உயிரிழப்பில் நான்கில் ஒருபங்கு மக்கள் அமெரிக்காவில் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் 24,80,503 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இதில் உலகில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.7 லட்சத்தை தாண்டி உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 646328 பேர் இதுவரை குணமாகி வீடு திரும்பி உள்ளனர். உலகிலேயே நேற்று அதிகபட்சமாக அமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 1939 பேர் உயிரிழந்தனர்.

இதனால் அமெரிக்காவில் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42,514 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவை அடுத்து ஸ்பெயினில் கொரோனாவால் 399 பேர் நேற்று உயிரிழந்தனர்.

இங்கிலாந்தில் 449 பேரும், ஜெர்மனியில் 330 பேரும், துருக்கியில் 121 பேரும் உயிரிழந்தனர்.

உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை 792,759 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரு நாளில் மட்டும் 28,123 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கு அடுத்த இடத்தில் ஸ்பெயின் உள்ளது. ஸ்பெயினில் 200,210 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 3வது அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி உள்ளது.

அங்கு 181,228 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.