சீன கடல் எல்லைக்குள் புகுந்த அமெரிக்கா போர் கப்பல்கள் ;பெரும் பதற்றம்!

4 bb
4 bb

சீனா தனது கடல் எல்லை என்று கூறிக்கொண்டு இருக்கும் சீனாவின் தென்கடல் பகுதியில் அமெரிக்காவின் போர் கப்பல்கள் நிறுத்தப்பட்டு ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது.

‘டெசிக்னேடட் சர்வைவர்”.. அமெரிக்க அரசியல் குறித்த இந்த நெட்பிளிக்சில் சீரிஸ் மிகவும் ஹிட்டான ஒரு சீரிஸ். அமெரிக்காவில் அதிபர் திடீர் குண்டு வெடிப்பு காரணமாக பலியாக அங்கு பதவி ஏற்கும் புதிய அதிபர் எப்படி சிரமங்களை, எதிர்ப்புகளை சமாளிக்கிறார் என்பதுதான் இந்த தொடரின் கதை.

குண்டு வெடிப்பு காரணமாக அமெரிக்காவே நிலை குலைந்து போய் இருக்கும். அமெரிக்கா குண்டு வெடிப்பில் நிலைகுலைந்து போன நேரத்தை பயன்படுத்திக் கொண்டு ஈரான் சர்ச்சைக்குரிய ஹோர்முஸ் ஜலசந்தியில் தனது போர் கப்பலை குவிக்கும். அமெரிக்கா தன்னை எதுவும் கேட்காது என்ற தைரியத்தில் ஈரான் தனது போர் கப்பலை குவிக்கும்.

அந்த தொடரில் இந்த காட்சி பெரிய சர்ச்சையானது. ஆனால் தற்போது அதே போல ஒரு விஷயம் கொரோனா வைரஸ் பிரச்சனைக்கு இடையே உண்மையில் அமெரிக்காவில் நடக்கிறது.

இந்தமுறை சண்டை போடுவது அமெரிக்காவும், சீனாவும். சீனாவின் தெற்கு எல்லையில் இருக்கும் தென் சீன கடல் பகுதி மிகவும் சர்ச்சைக்குரிய பகுதி ஆகும். இதில் குறிப்பிட்ட பகுதியை மலேசியா, சீனா, வியட்நாம் ஆகிய நாடுகள் சொந்தம் கொண்டாடுகிறது.

மலேசியா இங்குதான் கடலில் எண்ணெய் எடுத்துக் கொண்டு இருக்கிறது. அதேபோல் இங்குதான் வியட்நாம் தீவிரமாக ரோந்து போய்கொண்டு இருக்கிறது.

அதே சமயம் இந்த கடல்பகுதியை சீனா தனது என்று சொந்தம் கொண்டாடி வருகிறது. இப்படி சொந்தம் கொண்டாடினாலும் கூட, சீனா இத்தனை நாட்கள் இங்கு போர் கப்பல்களை நிறுத்தி ரோந்து பணிகளை எல்லாம் செய்யவில்லை. மலேசியாவின் கடல் எல்லைக்குள் செல்லவில்லை.

ஆனால் தற்போது திடீர் என்று கடந்த நான்கு நாட்களாக மலேசியாவின் கடல் எல்லைக்குள் சீனாவின் Haiyang Dizhi போர் கப்பல்கள் சென்று ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது.

முக்கியமாக மலேசியாவின் எண்ணெய் கிணறுகள் இருக்கும் பகுதியை நோக்கி சுற்றி சுற்றி வருகிறது. மலேசியா இதனால் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறது. இதனால் நான்கு நாட்களாக பதற்றம் நிலவுகிறது.

அமெரிக்கா கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு இருப்பதை பயன்படுத்திக் கொண்டு சீனா இப்படி ஆட்டம் போட தொடங்கி உள்ளது. அதாவது அமெரிக்கா இனி பெரிய ஆள் இல்லை. தென் சீன கடல் தொடங்கி ஆசியா முழுக்க நான்தான் கிங் என்பதை சொல்வது போல சீனா தனது கப்பல்களை குவிக்க தொடங்கி உள்ளது. இதை அமெரிக்கா வாய் மூலம் கண்டித்து பார்த்தது. ஆனால் சீனா பின் வாங்கவில்லை.

ஆனால் அமெரிக்கா இதை விடவில்லை. இந்த விஷயம் தெரிந்ததும் தற்போது அமெரிக்கா தனது போர் கப்பல்களை அந்த கடல் பகுதிக்கு அனுப்பி வைத்து உள்ளது. மொத்தம் 6 போர் கப்பல்களை அமெரிக்கா அனுப்பி வைத்து உள்ளது. USS Bunker Hill எனப்படும் ஏவுகணைகளை கொண்ட மிகப்பெரிய கப்பல்களை அமெரிக்கா சீனாவின் எல்லைக்குள் நிறுத்தி வைத்து உள்ளது. USS Barry எனப்படும் இன்னொரு போர் கப்பலும் அங்கே நிறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த போர் கப்பலுடன் ஆஸ்திரேலியாவின் போர் கப்பலும் இணைந்துள்ளது. இதனால் அங்கு கடுமையான பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவின் போர் கப்பலில் இருந்து வெறும் 20 கிமீ தூரத்தில்தான் அமெரிக்காவின் இந்த போர் கப்பல்கள் இருக்கிறது. இதனால் அங்கு போர் ஏற்பட போகிறதா ஏதாவது சண்டை ஏற்பட போகிறதா என்று அச்சம் ஏற்பட தொடங்கி உள்ளது. ஏற்கனவே கொரோனா காரணமாக சீனா, அமெரிக்கா இடையே கடுமையான பிரச்சனை உள்ளது குறிப்பிடத்தக்கது.