இடது மார்பகத்தில் பாய்ந்த துப்பாக்கி குண்டு

7 es 5
7 es 5

கனடாவில் சற்று வித்தியாசமாக, செயற்கை மார்பகத்தால் பெண் ஒருவர் உயிர் பிழைத்துள்ளார். அமெரிக்காவில் இருந்து சேஜ் மருத்துவ நாளிதழ் வெளியாகிறது.

இதில் வெளிவந்துள்ள கட்டுரை ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது:கனடாவின் டொரா ன்டோ நகரைச் சேர்ந்த சேர்ந்த 30 வயது பெண் ஸ்டெபி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் நகரில் காலையில் வாக்கிங் சென்றுள்ளார்.

அப்போது திடீரென அவரது மார்பகத்தில் லேசாக வலி எடுத்தது. இதனால், பக்கவாட்டில் தொட்டுப் பார்த்துள்ளார். அப்போது அங்கு ரத்தம் வந்துக் கொண்டிருந்தது.

இதனால், அவர் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று டாக்டரிடம் மார்பகத்தில் வலி எடுப்பதாகவும், ரத்தம் வந்து கொண்டிருப்பதாகவும் கூறினார். டாக்டர்கள் உடனடியாக ஸ்டெபியை படுக்க வைத்து ஆராய்ந்தனர். அதில்தான் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

காரணம், ஸ்டெபியின் இடது மார்பகத்தில் பாய்ந்த துப்பாக்கி குண்டு, அதில் ஊடுருவ முடியாமல் மீண்டும் மின்னல் வேகத்தில் திரும்பியதில் வலது மார்பகத்தில் பாய்ந்து நின்றிருந்தது.

இதற்கு காரணம், ஸ்டெபியின் மார்பகங்கள் உண்மையானவை அல்ல. அவர் சமீபத்தில் சிலிகான் எனப்படும் வழ, வழ, கொழ, கொழ என்று இருக்கும் செயற்கை மார்பகத்தை தன்னுள் வைத்து, மார்பகங்களை எடுப்பாக்கி உள்ளார்.

ஸ்டெபி வாக்கிங் சென்றுக் கொண்டிருந்தபோது, அங்கு இருந்தவர்களுக்குள் சண்டை நடந்து யாராவது ஒருவர் துப்பாக்கியால் சுட்டிருக்க வேண்டும். அந்த குண்டு ஸ்டெபியின் மார்பகத்தை நோக்கி பாய்ந்துள்ளது.

ஆனால், அவர் செய்த அதிர்ஷ்டம் அந்த குண்டு செயற்கை மார்பகத்தில் பட்டு தெறித்துள்ளது. செயற்கை மார்பகம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நேரடியாக குண்டு மார்பகம் வழியாக நெஞ்சுக்குள் புகுந்து முக்கிய உறுப்புகளை சிதறடித்து இருப்பதுடன், அவரும் உயிர் இழந்திருப்பார்.

சிலிகான் ஜெல்லுக்கு இவ்வளவு வலிமை இருப்பது ஆச்சரியப்படத்தக்க விஷயம்தான். இப்போது அதில் கூடுதல் ஆய்வுகள் நடந்து வருகிறது.