பிரிட்டனில் தனிமைப்படுத்துதல் குறித்து புதிய விதிமுறைகள்

i3 10 1
i3 10 1

பிரிட்டனில் கொரோனா பாதிப்புகளையொட்டி தனிமைப்படுத்துதலில் சில புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.


கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. பிரிட்டனில் நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பிரிட்டனில் 2,87000 மேற்பட்டோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இன்று புதிதாக கொரோனாவால் 1205 பேர் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதுவரை 40,597 பேர் பலியாகினர். பிரிட்டனில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக பலரும் தனிமைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, நோயாளிகள், 14 நாட்கள் தங்களை சுயமாக தனிமைப்படுத்த வேண்டும். அயர்லாந்து, சேனல் தீவு, மனித தீவுவாசிகளுக்கு விதிவிலக்கு தரப்பட்டுள்ளது. பிரிட்டனுக்குள் ரயில், விமானம், கப்பல் என எந்தவிதமாக சென்றாலும் தனிமைப்படுத்துதல் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்வதற்கான முகவரியை தராவிட்டால், அரசு செலவில் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்படும். தனிமைப்படுத்துதல் விதியை அவர்கள் பின்பற்றுகிறார்களா என்பது தீவிரமாக கண்காணிக்கப்படும். வெளியில் எங்கும் செல்ல அனுமதியில்லை. 14 நாட்கள் முழுமையாக தனிமைப்படுத்துதலை கடைபிடிக்க தவறினால் அவர்களுக்கு 1000 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.