கொரோனா வைரசின் உலகளாவிய பகிரலைகளில் ஒன்றாக பிரேசில்

i3 16 3
i3 16 3

கொரோனா வைரசின் உலகளாவிய பகிரலைகளில் ஒன்றாக பிரேசில் உருவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா தாக்கம் குறித்து உலக சுகாதார அமைப்பின் சிறப்பு நிபுணரான மைக் ரியான் கூறியதாவது: கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவின் தென் மற்றும் மத்தியப் பகுதிகளில் கடுமையாகப் பரவி வருகிறது.

தற்போதைக்கு கொரோனா வைரசின் உலகளாவிய பகிரலைகளில் ஒன்றாக பிரேசில் உருவாகியுள்ளது. குறிப்பாக அதிக மக்கள்தொகை கொண்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதி தீவிரமாகப் பரவி வருகிறது.

ஊரடங்குக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, மக்கள் கூடும் இடங்களில் சமூக இடைவெளி மற்றும் பொது சுகாதாரத்தைப் பின்பற்றாமல் இருந்தால் தொற்று அதிகரிக்கும். மக்களை வீட்டில் வைத்திருப்பதற்கும், பொருளாதார விளைவுகளுக்கும் இடையே ஒரு கவனமான சமநிலை உள்ளது. அது எளிதான சமநிலை அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.