நேபாளம் ; புதிய வரைபடத்திற்கு பாராளுமன்றம் ஒப்புதல்!

i3 17 3
i3 17 3

இந்தியாவின் உத்தர்கண்ட் மாநிலத்தில் உள்ள சில பகுதிகளை இணைத்து நேபாளம் வெளியிட்டுள்ள வரைபடத்திற்கு அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்திற்குட்பட்ட சில பகுதிகளான லிபுலேக், கலாபானி, லிம்பியாதுரா ஆகியவற்றை தங்களுக்கு சொந்தம் என கூறிக்கொண்டு நேபாள அரசு புதிய வரைபடத்தை கடந்த மே மாதம் வெளியிட்டது. இந்த வரைபடத்திற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் நேபாளம் தன் அதிகாரப்பூர்வ வரைபடத்தில் மாற்றம் செய்வதற்கான அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாவை, பாராளுமன்றில் தாக்கல் செய்தது.

இதன் மீது விவாதம் இன்று நடந்தது. பின்னர் பிரதிநிதிகள் சபையில் நடந்த ஒட்டெடுப்பில் மொத்தமுள்ள 275 உறுப்பினர்களில் மசோதாவுக்கு ஆதரவாக 258 பேர் ஆதரவாக ஒட்டளித்தனர். இதையடுத்து மசோதா பெரும்பான்மையுடன் நிறைவேறியது. விரைவில் நேபாளம் அதிபரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. நோபளம் அரசின் இந்த செயலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.