பாகிஸ்தான் அமைச்சருக்கு கொரோனா தொற்று..!

i3 22 2
i3 22 2

பாகிஸ்தான் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் சையத் அமினுல் ஹக்கிற்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது இன்று உறுதியாகியுள்ளது.

பாகிஸ்தானில் இன்று ஒரே நாளில் 4,443 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 1.48, 919 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 111 பேர் உயிரிழந்ததை அடுத்து பலியானோர் எண்ணிக்கை 2,839 ஆக அதிகரித்து உள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் முத்தாஹிதா குவாமி இயக்கத்தின் தலைவரான சையத் அமினுல் ஹக், கடந்த ஏப்.6ம் திகதி தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைதொடர்புத்துறை அமைச்சராக பதவியேற்றார்.

கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து டைபாய்டு காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கொரோனா பாதிப்பு இருப்பதாக உணர்ந்ததை அடுத்து சுயமாக தனிமைப்படுத்தி கொண்டதாக அவர் தெரிவித்தார்.

பாக்கிஸ்தானில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எம்.பிக்கள் பலர் கொரோனாவால் பாதிக்கபட்டுள்ளனர். இதுவரை மாகாண அமைச்சர் உள்பட 4 அரசியல் தலைவர்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

ஏற்கனவே, சிந்து மாகாண மகளிர் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சையதா ஷெஹ்லா ராசா கொரோனா உறுதியானதை தொடர்ந்து வீட்டில் சுயமாக தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.