ஐநா சபையில் உரையாற்றிய 15 வயது தமிழ் சிறுமி ஜனனி

janany sivakumar 1
janany sivakumar 1

உலக அமைதி தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையில் கடந்த மாதம் நடைபெற்ற பருவநிலை மாற்றம் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்று, தமிழகத்தில் தனது அமைப்பு செயல்படுத்தி வரும் திட்டத்தை விளக்கியுள்ளார் அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தை சேர்ந்த 15 வயது தமிழ்ச் சிறுமியான ஜனனி சிவக்குமார்.

மேலும் தனது உரையில் “உலகையே அச்சுறுத்தி வரும் பருவநிலை மாற்றத்தை நாம் ஒவ்வொருவரும், நம்மை உலகத்தின் குடிமகனாக கருதி செயலாற்ற வேண்டும்” என்பதை வலியுறுத்தியிருந்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் இந்த சிறப்பு கூட்டத்தில் பேசுவதற்கு உலகம் முழுவதிலிருந்து போட்டியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 மாணவ தலைவர்களில் இந்தியாவை பூர்விகமாக கொண்ட ஒரே நபர் இவர்தான்.

தமிழகத்தில் பள்ளி மாணவிகளின் முன்னேற்றத்துக்காகவும், அவர்களிடையே பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் தான் செய்து வரும் பணிகள் குறித்து ஐநா கூட்டத்தில் ஜனனி எடுத்துரைத்தார்.

ஸ்வீடனை சேர்ந்த பருவநிலை மாற்ற ஆர்வலரான 16 வயது சிறுமி கிரேட்டா தன்பர்க் ஐக்கிய நாடுகள் சபையில் ஆற்றிய உரை உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.