தனது பிறந்த நாளையொட்டி 2 கிராமங்களை தத்தெடுத்த நடிகை!

download 28
download 28

பிரபல நடிகை ஜக்குலின் பெர்னாண்டஸ் தனது பிறந்த நாளையொட்டி மராட்டியத்தில் உள்ள பதார்தி, சக்கூர் ஆகிய 2 கிராமங்களை தத்தெடுத்து இருப்பதாக அறிவித்துள்ளார்.

இலங்கை நடிகையான ஜக்குலின் இந்தி, தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கில் வெளியான சாஹோ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார்.

கிராமங்களை தத்தெடுத்தது குறித்து ஜக்குலின் பெர்னாண்டஸ் தெரிவிக்கும்போது,

“ கொரோனா தொற்றினால் மக்கள் பலர் பாதித்துள்ளனர். இது அனைவருக்கும் கஷ்டமான காலம். பலர் அடிப்படை தேவைகளுக்காக போராடுகிறார்கள். மக்களுக்கு நம்மால் ஏதேனும் உதவிகள் செய்ய வேண்டும் என்ற நோக்கில் இரண்டு கிராமங்களை தத்தெடுத்து உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

இந்த கிராமங்களில் வசிப்பவர்களுக்கு ஜக்குலின் ஊட்டச்சத்து உணவுகள் வழங்குதல், வேலை வாய்ப்பு பயிற்சி, சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல பணிகளை செய்ய உள்ளார்.