உத்தியோகபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வேட்பாளர் ஜோ பிடன்!

202006071434108243 Joe Biden formally clinches Democratic presidential SECVPF
202006071434108243 Joe Biden formally clinches Democratic presidential SECVPF

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளராக ஜோ பிடன் உத்தியோகபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பை அடுத்தே கட்சியின் உத்தியோகபூர்வ வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா பதவி வகித்த காலப்பகுதியில் துணை ஜனாதிபதியாக இருந்த ஜோ பிடன், 1988 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கிய போதிலும் அவரால் ஜனநாயக கட்சியின் உத்தியோகபூர்வ வேட்பாளராக வரமுடியவில்லை.

எனினும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 03 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதிகளான பில் கிளிண்டன், ஜிம்மி காடர் மற்றும் முன்னாள் உள்விவகார அமைச்சர் கொலின் பவல் ஆகியோர் ஜோ பிடனை ஆதரித்துள்ளனர்.

இதேவேளை குடியரசு கட்சியின் தேசிய மாநாடு அடுத்த வாரம் நடைபெறலாம் எனவும், இந்த மாநாடு பெரும்பாலும் காணொளிக் காட்சி மூலம் நடத்தப்பட்டு, டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.