51 பேரை சுட்டு கொன்ற நபருக்கு வழங்கப்பட்ட தண்டனை!

114142025 0d974605 7ef6 446e 84ba f1d4e419159c
114142025 0d974605 7ef6 446e 84ba f1d4e419159c

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் 2 மசூதிகளில் தொழுகையில் இருந்த 51 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று பிரென்டன் டாரண்டுக்கு பரோல் இல்லாத ஆயுள் தண்டனை வழங்கி நியூசிலாந்து நீதி மன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம், நியூசிலாந்தின் அல்நூர் மற்றும் லின்வுட் மசூதிகளில் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களின் மீது ஆவுஸ்திரேலியாவை சேர்ந்த 29 வயது பிரென்டன் டாரண்ட், என்ற வெள்ளை நிறவெறியர் மேற்கொண்ட மிலேச்சத்தனமான துப்பாக்கி பிரயோகத்தில் 51 பேர் வரை கொள்ளப்பட்டனர்.

கிரைஸ்ட்சர்ச் துப்பாக்கிச்சூடு நிகழ்த்திய குற்றவாளிக்கு பரோல் இல்லாத வாழ்நாள் சிறை தண்டனை

இவ் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட குறித்த நபர் இதனை பேஸ்புக்கில் நேரலையாகவும் ஒளிபரப்பியிருந்தர். இதனையடுத்து கைது செய்ப்பட்ட குறித்த நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டுவந்தது.

உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கில், தண்டனை குறித்த விசாரணை கடந்த 4 நாட்கள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், கொலையாளி பிரென்டன் டாரண்டுக்கு, நியூசிலாந்தின் நீதிபதி கேமரூன் மாண்டர் பரோல் இல்லாத ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.

இவ் தீர்ப்பின் போது, தந்தையின் கால்களைப் பிடித்துக் கொண்டு நடுநடுங்கி நின்ற 3 வயது குழந்தையையும் கொலை செய்த டாரன்ட், மனிதத்தன்மையற்றவன் என நீதிபதி குறிப்பிட்டுள்ளார். இதே வேளை நியூஸிலாந்து வரலாற்றில் தீவிரவாத செயல் தொடர்பான வழக்கில் அதிகபட்ச தண்டனை முதல்முறையாக இந்த வழக்கின் குற்றவாளிக்கு வழங்கப்பட்டுள்ளது.

பரோல் இல்லாமல் வாழ்நாள் சிறை தண்டனை என்பது, தண்டனை வழங்கப்பட்ட நபர், ஒரு குறிப்பிட்ட காலம் சிறையில் இருந்த பிறகு அவருக்கு வெளியே வர அனுமதி வழங்கப்பட மாட்டாது.